கூட்டணிக் கட்சி எம்எல்ஏ.க்களுடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனை

Wait 5 sec.

சென்னை: தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் ஜோசப் விஜய் திங்கள்கிழமை (நவ. 23) சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார். நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வரும் இடதுசாரி கட்சிகளும், விஜய் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றன.மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஒவ்வொரு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் தங்கள் தொகுதி தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேரடியாக முதல்வரிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏ-க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். சென்னை கொளத்தூர் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு நவம்பர் 19-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்த அடுத்த நாளே இந்தக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இந்தக் கூட்டத்தில் காலியாக உள்ள 6 தொகுதிகள் இடைத்தோ்தல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.Tamil Nadu Chief Minister C Joseph Vijay is scheduled to meet the MLAs, including those from the alliance partners extending support to his TVK governmentபாதுகாப்பற்றதா பிஸ்லெரி குடிநீர்..?