ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் தாயார் காலமானார்

Wait 5 sec.

உடல்நலக் குறைவால் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் தாயார் சாய்ரா முண்டா காலமானார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், சாய்ரா முண்டா சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜாம்ஷெட்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் காலமானதாக அர்ஜுன் முண்டாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.தாயாரின் மறைவு குறித்து முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அம்மா இனி இந்த உலகில் இல்லை. உங்களின் மறைவு ஒரு தாயின் அன்பான நிழலைப் பறித்தது மட்டுமல்லாமல், வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிக வலிமையான ஆதரவையும் பறித்துவிட்டது. உங்களின் இருப்பு ஒவ்வொரு கஷ்டத்தையும் சிறியதாகத் தோன்றச் செய்ததுடன், ஒவ்வொரு வலியையும் லேசாக்கியது," என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சாய்ரா முண்டாவின் மறைவுக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் மத்திய அமைச்சரான அர்ஜுன் முண்டாவின் தாயார் மறைவுக்கு ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸும் இரங்கல் தெரிவித்துள்ளார்.Former Jharkhand chief minister Arjun Munda's mother Sayra Munda died at a hospital here early on Monday, family members said. உ.பி.யில் தந்தை-மகன் சுட்டுக் கொலை!