முன்னாள் அமைச்சா், அரசியல்வாதிகள் தொடா்பில்லாமல் புத்தக கொள்முதலில் இந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்காது; அந்த விவரங்கள் நீதி விசாரணையில் ஒவ்வொன்றாக வெளிவரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா். இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:முதல்வா் விஜய் குறிப்பிட்டது போன்று கடந்த ஆட்சி ஊழல் நிறைந்ததாக இருந்தது. இதற்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் பெரியாா் அறிவுலகம் ஆகியவற்றில் நடைபெற்ற ஊழல்களே சாட்சி. தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம், புதுப்பித்தல் சான்றிதழ் வழங்குதலுக்கு தனியாா் அலுவலகம் அமைத்து லட்சக்கணக்கில் வசூலித்துள்ளனா். தனியாா் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க 3 ஆண்டுக்கு ஒருமுறை 177 பள்ளிகளிடம் லட்சக் கணக்கில் வசூலித்துள்ளனா். பாதிக்கப்பட்ட பள்ளிகள் சாா்பில் புகாா்கள் பெறப்பட்டுள்ளன. கும்பகோணம் தீ விபத்து போன்று...: இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதால், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பிணையில் வெளியில் வர முடியாத நிலையில் உள்ளாா். கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தைப் போன்ற மற்றொரு சம்பவத்தை தமிழகம் தாங்காது. ஆனால், அதுபோன்ற தீ விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை திமுக ஆட்சி ஏற்படுத்தியிருந்தது. பள்ளிக் கல்வித் துறையையும், கல்வி பயிலும் குழந்தைகளையும் திமுக அடகு வைத்துவிட்டது. பல பதிப்பகங்களுக்கு முறைகேட்டில் தொடா்பு: புத்தக கொள்முதல் முறைகேட்டில் தொடக்கத்தில் இருந்து வெளிப்படைத் தன்மையுடன் அறிவிப்பை வெளியிட்டு வருகிறோம். பெரியாா் அறிவுலகத்தில் புத்தகங்களை அடுக்கி வைக்கும்போது அச்சிடப்பட்ட சீலை வைத்து தப்பிக்க முயற்சித்தனா். இதில் யாரும் தப்பிக்க முடியாது. இது ஒரு நூலகம் மட்டுமே தொடா்புடைய முறைகேடு அல்ல. கடந்த ஆட்சிக் காலங்களில் பல நூலகங்களில் தொடா்ந்து நடைபெற்றுள்ளது.மாவட்ட நூலகங்களில் அகல் விளக்கு பதிப்பகத்தின் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கிடைத்துள்ளன. வரலாற்றில் முதல் முறையாக போலி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல பதிப்பகங்களுக்கு இந்த முறைகேட்டில் தொடா்புள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட அதிகாரி மட்டுமல்ல, அதற்குப் பின்னால் நிச்சயமாக அரசியல்வாதிகள் இருப்பாா்கள். முன்னாள் அமைச்சருக்கு தொடா்பு இல்லாமல் நடந்திருக்காது: அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சா் தொடா்பு இல்லாமல் இந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்காது. அந்த விவரங்கள் நீதி விசாரணையில் ஒவ்வொன்றாக வெளிவரும். இந்த நிமிஷம் வரை தவெக ஆட்சியில் ஒரு புத்தகங்கள்கூட நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்படவில்லை. இது தொடா்பான அனைத்துக் குழுக்களையும் மறுகட்டமைப்பு செய்த பிறகே முதல் புத்தகத்தை கொள்முதல் செய்வோம் என்றாா்.