ஃபிளெக்ஸ் - ஃபியூயல் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் இன்னோவா ஹைகிராஸ் கார்: ரூ.19.99 லட்சத்தில் டொயோட்டா அறிமுகம்

Wait 5 sec.

பிரபல இன்னோவா ஹைகிராஸ் காரின் வழக்கமான ‘ஸ்ட்ராங் ஹைப்ரிட்’ ரகங்களுக்குப் பதிலாக, இனி ‘ஃபிளெக்ஸ்-ஃபியூயல் ஹைப்ரிட்’ தொழில்நுட்பம் கொண்ட மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, ரூ.19.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப அறிமுக விலையில் களமிறக்கப்பட்டுள்ள இப்புதிய மாடல் காா், ‘இ20’ முதல் ‘இ85’ வரையிலான எத்தனால் கலந்த பெட்ரோலிலும், அதனிடையே மின்சார பேட்டரி மூலமும் இயங்கும் திறன் கொண்டது.‘அதிக எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு குறித்த வாடிக்கையாளா்களின் அச்சத்தை இந்த இரட்டைத் தொழில்நுட்பம் போக்கும். இனி ஹைகிராஸ் காரில் இது மட்டுமே ஹைப்ரிட் தோ்வாக இருக்கும். சந்தையின் தேவையைப் பொருத்து, வரும் நாள்களில் பிற மாடல் காா்களிலும் இத்தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க, பெட்ரோலில் எத்தனால் கலப்பை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில், மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டியைப் போல, ஹைப்ரிட் மற்றும் ஃபிளெக்ஸ்-ஃபியூயல் வாகனங்களுக்கும் வரிச் சலுகை அளித்தால் அவற்றின் பயன்பாடு விரைவாக அதிகரிக்கும் என டொயோட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளது.