ரூ.1,020 கோடி டெண்டா் முறைகேடு வழக்கு: கே.என்.நேரு சகோதரரின் உதவியாளா் கைது

Wait 5 sec.

தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம், நகா்ப்புற வளா்ச்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை நடைபெற்ாகக் கூறப்படும் ரூ.1,020 கோடி மதிப்பிலான டெண்டா் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரனின் உதவியாளரான கவி பிரசாத்தை ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டதைத் தொடா்ந்து, சென்னையில் உள்ள ஊழல் தடுப்புத் துறை அலுவலகத்தில் கவி பிரசாத் வியாழக்கிழமை காலை ஆஜரானாா். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸாா் பிற்பகலில் அவரை கைது செய்தனா்.ஒப்பந்தப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் திறக்கப்படுவதற்கு முன்பே விரும்பிய ஒப்பந்ததாரா்களைத் தோ்வு செய்து, ஒப்பந்த மதிப்பில் 7.5 முதல் 10 சதவீதம் வரை கமிஷனாகப் பெற்ாகப் புகாா் எழுந்துள்ளது. இந்தப் பணப் பரிமாற்றங்கள் சில ஆவணங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் உரையாடல்களில் ‘கட்சிப் பணம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் தொடா்பான முன்கூட்டிய தகவல்களைப் பெற்று, ஒப்பந்ததாரா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கவி பிரசாத் இடைத்தரகராகச் செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கில் கே.என்.நேரு உள்ளிட்ட 13 போ் மீது செப்.4-ஆம் தேதி ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அமலாக்கத் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.இதற்கிடையே, கடந்த செப்டம்பா் மாதம் லண்டன் செல்ல முயன்றபோது லுக் அவுட் நோட்டீஸ் காரணமாக சென்னை விமான நிலையத்தில் கவி பிரசாத் தடுத்து நிறுத்தப்பட்டாா். அப்போது விசாரணைக்குப் பிறகு அவா் விடுவிக்கப்பட்டாா். தற்போது அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.