அந்நியச் செலாவணி கையிருப்பு 70,100 கோடி டாலராக சரிவு!

Wait 5 sec.

மும்பை: நவம்பர் 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 444.3 கோடி டாலர் குறைந்து 70,089.8 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது.இதுவே கடந்த வாரத்தில், அதன் ஒட்டுமொத்த கையிருப்பு 1,420.5 கோடி டாலர் குறைந்து 70,534.2 கோடி டாலராக இருந்தது.நவம்பர் 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், நாட்டின் அந்நியச் செலாவணி சொத்து 26.6 கோடி டாலர் குறைந்து 58,318.6 கோடி டாலராக இருப்பதாக தெரிவித்தது.தங்கக் கையிருப்பின் மதிப்பு தொடர்ந்து இரண்டாவது வாரமாக கடுமையாகச் சரிந்து, 409.5 கோடி டாலர் குறைந்து 9,451.9 கோடி டாலராக உள்ளது. அதே வேலையில், சிறப்பு வரைதல் உரிமைகள் கீழ் 6.7 கோடி டாலர் சரிந்தது 1,845.1 கோடி டாலராக உள்ளது என்றது.சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு நிலையும் 1.5 கோடி டாலர் குறைந்து 474.3 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.India's forex reserves dropped to USD 700.898 billion in the week ended November 20.டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60 காசுகள் சரிந்து ரூ. 92.98 ஆக நிறைவு!