அதிமுக-வுக்கு கிடைத்த வெற்றி! கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது குறித்து எடப்பாடி பழனிசாமி

Wait 5 sec.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் கைது அதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!முதல்வர் விஜய் Just a Reminder- நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம் !!இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்! என்று தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ. ஷாநாஸிடம் நவ. 23 ஆம் தேதி நேரடியாக புகாா் தெரிவித்தாா். இந்த புகாரைத் தொடா்ந்து எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நவ. 24-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதுபற்றி வியாழக்கிழமை (நவ. 26) நீதிபதியிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக 3 நாள்களாக விசாரணை அதிகாரி எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை நடத்திய நிலையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் வெள்ளிக்கிழமை (நவ. 27) கைது செய்யப்பட்டுள்ளார்.Following the arrest of Kallakurichi TVK MLA C. Arul Vignesh on November 27, 2026, AIADMK General Secretary Edappadi K. Palaniswami issued a statement characterizing the arrest as a victory for the AIADMK's legal and political pressure, rather than voluntary action by the ruling government.கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ கைது! சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்