ஆசிய கோப்பை அரையிறுதி: பாகிஸ்தான் ஏ அணிக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

Wait 5 sec.

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் ஏ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் எடுத்துள்ளது.ஆசிய கோப்பை ரைசிங்ஸ் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் தோஹாவில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ மற்றும் வங்கதேசம் ஏ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.ஷஹாதத் ஹொசைன் சதம் விளாசல்!பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் எடுத்துள்ளது.வங்கதேச அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஹாதத் ஹொசைன் சதம் விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 118 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மஹிதுல் இஸ்லாம் 42 ரன்கள், மெஹரப் 28 ரன்கள் மற்றும் ரிப்பன் மண்டோல் 19* ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.பாகிஸ்தான் தரப்பில் சூஃபியான் மோஹிம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அலி ராஸா மற்றும் ஹாசன் நவாஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மற்றும் அகமது டேனியல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் ஏ அணி களமிறங்குகிறது.In the semi-final match against Pakistan at the Asia Cup Rising Stars cricket tournament, the Bangladesh 'A' team batted first and scored 232 runs for the loss of 8 wickets.மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!