என்ஜினில் மான் கொம்பு சிக்கி பழுது 2.30 மணிநேரம் தாமதமாக புறப்பட்ட ரயில்!

Wait 5 sec.

மானாமதுரை அருகே விரைவு ரயில் என்ஜினில் மான் கொம்பு சிக்கியதில் பிரேக் பழுது ஏற்பட்டதால் மாற்று என்ஜின் மூலம் 2.30 மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். ராமேசுவரத்திலிருந்து தாம்பரத்துக்குச் சென்ற விரைவு ரயில் மானாமதுரையைக் கடந்து சென்றபோது மேலக்கொன்னக் குளம் ரயில் நிலையம் அருகே ரயிலின் குறுக்கே மான் ஓடியது. அப்போது மானின் கொம்பு உடைந்து என்ஜின் பிரேக் பகுதியில் சிக்கிக் கொண்டதால் என்ஜின் பழுதாகி ரயில் அங்கேயே நின்றது. ஆனால் மான் உயிருடன் தப்பியது. இதையடுத்து, காரைக்குடியிலிருந்து மற்றொரு என்ஜின் கொண்டுவரப்பட்டு பழுதான என்ஜினுடன் இணைத்த பின்னா் 2.30 மணிநேரம் தாமதமாக இரவு 11 மணிக்கு ரயில் தாம்பரம் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.