ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!

Wait 5 sec.

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளனர். பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்த நிலையில் அமைச்சர் நிர்மல் குமார், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் எம்எல்ஏவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணையிலும்கூட 'மாவட்ட ஆட்சியர் தரப்பில் இருந்து இன்னும் புகார் வரவில்லை' என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யிடம் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளார். காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சிப்பதுடன் தவெக எம்எல்ஏவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளதையடுத்து தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளனர். அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Police arrive at the residence of the TVK MLA from Kallakurichi on district collector issueஇதை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? இபிஎஸ்