இஞ்சி வெல்லம் முதல் பாடல் அறிவிப்பு!

Wait 5 sec.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இஞ்சி வெல்லம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். காதல் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் கொல்கத்தாவில் தொடங்கியது.அங்கு ஹவுரா பாலத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், சாய் பல்லவியும் பாடல் காட்சிக்கு நடித்து வருவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றது. தொடர்ந்து, இப்படத்திற்கு இஞ்சி வெல்லம் எனப் பெயரிட்டுள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டு அறிவித்தனர். மேலும், இப்படம் அடுத்தாண்டு ஜன. 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. The first single from #InjiVellam has a name ❤️‍#AachiAachi drops tomorrow Puyalism begins before birth #ManiRatnam @arrahman @MadrasTalkies_ #Subaskaran @LycaProductions @VijaySethuOffl @Sai_Pallavi92 @sreekar_prasad #AvikMukhopadhayay @ekalakhani #SharmishtaRoy @Chaithra_Achar_ @BrindhaGopal1 @dhilipaction @AmbadyRanjith @bagapath @gkmtamilkumaran @sonymusicsouth @NetflixIndia @homescreenent @sst_casting @gopiprasannaa @SureshChandraa @DoneChannel1 @cinemapayyan#InjiVellamFromJan29— Madras Talkies (@MadrasTalkies_) November 24, 2026 இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ஆச்சி ஆச்சி பாடல் நாளை (நவ.25) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. தெரிந்துதான் பேசுகிறாரா? வெற்றி மாறனை விளாசும் ரசிகர்கள்!The release of the first song from the film Inji Vellam, starring actor Vijay Sethupathi, has been announced.