இயக்குநர் வெற்றி மாறன் பேசியது விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் விடுதலை திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர்கள் சிலம்பரசன், பிரியங்கா மோகன், விஜய் சேதுபதியை வைத்து அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது, வடசென்னை திரைப்படத்துடன் தொடர்புடைய கதையாக உருவாவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அதேநேரம், அரசன் கிளிம்ஸ் விடியோ ஒன்று தீபாவளியை முன்னிட்டு வெளியானது. ஆனால், அதில் இடம்பெற்ற பின்னணி இசையும் பாடல் வரிகளும் வெற்றி மாறன் வன்முறையை அழகியலாகக் காட்டுகிறேன் என சமூகத்தைத் தவறாக வழிநடத்துகிறார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட வெற்றி மாறன், “எல்லாரும் என் திரைப்படங்களில் லிப் சிங்க் (உதட்டின் அசைகளுக்கும் வசனத்திற்குமான தொடர்பு) குறித்து கேட்கிறார்கள். என் குழுவினரிடம் நான் சொல்வது இதுதான்; எனக்கு கதைதான் முக்கியம். லிப் சிங்க் அல்ல. உங்களுக்கு அதுதான் முக்கியம் என்றால் நீங்கள் அதனை மட்டும் பாருங்கள்” என்றார். வெற்றி மாறனின் திரைப்படங்களில் அடிக்கடி இந்த லிப் சிங்க் பிரச்னை வருதுண்டு. பலமுறை விமர்சனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெற்றி மாறனின் இக்கருத்தைக் கேட்ட ரசிகர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு திரைப்படம் என்பது எல்லா துறைகளின் கூட்டுழைப்புதான்; கதையைச் சொல்கிறேன் என தொழில்நுட்ப ரீதியாக சரியாகக் காட்டத் தேவையில்லை என்பது போல் இவர் பேசுவதை ஏற்க முடியாது என சிலர் பதிவிட்டு வருகின்றனர். Such a pathetic speech by Vetrimaaran taking Audience for granted this isn't the same person whom I admired for his film making and his knowledge Disappointing https://t.co/U7naEC5Fq3— Keshava (@Keshav367212606) November 24, 2026 மேலும், தன் இசையமைப்பாளர்களிடம் உங்களுக்குத் தெரிந்ததை வாசித்துக்கொடுங்கள்; கதை இருக்கிறது இசையை யார் கவனிக்கப் போகிறார்கள்? என வெற்றி மாறனால் கேட்க முடியுமா? என்றும் கேள்வியெழுப்புகின்றனர். ‘சண்டியா்’ திரைப்படத் தலைப்புக்கு எதிராக டிச.7-இல் போராட்டம்: க.கிருஷ்ணசாமி Director Vetrimaaran's remarks are drawing criticism.