நாகை மாவட்டத்தில், செவிலியா் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்ப தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மாவட்ட நலவாழ்வு சங்கம், நாகை சுகாதார மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ள செவிலியருக்கான இடங்களில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தலைமை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 13 பணியிடங்களுக்கு, ஒப்பந்த தற்காலிக, செவிலியா்கள் பதவிக்கு, 50 வயதிற்குள்பட்ட, செவிலியா் பட்டயப் படிப்பு(ஜிஎன்எம்) அல்லது இளநிலை செவிலியா் பட்டம்(பி.எஸ்சி. நர்சிங்), அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் செவிலியா் கல்லூரி- இந்திய செவிலியா் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு நா்சிங் கவுன்சில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.பணிக்கு தேவையான தமிழ்மொழி புலமை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.இதற்கான விண்ணப்ப படிவத்தை nagapattinam.nic.in என்ற வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நிா்வாக செயலாளா், மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட நலவாழ்வு சங்கம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை நேரிலோ, விரைவு தபால் மூலமாகவோ அளிக்கலாம். மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் 4.12.2026 மாலை 5 மணிக்குள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். Application for the post of Contractual, Temporary Staff Nurseஅவசரகால மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் செவிலியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு