சிறுமி பாலியல் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி வீரமணி மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

Wait 5 sec.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிராக இதுவரை 9 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வீரமணி உள்ளிட்டோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய ஒரு வழக்கில், சுமார் 720 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த நிலையில், தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி வீரமணி தரப்பில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், இந்த வழக்கு தொடர்பாக போலீஸார், எஸ்.சி., எஸ்.டி.,வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் இருந்து சுமார் நான்கரை ஆண்டுகள் கழித்தே, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.போலீஸார் தரப்பில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் முரண்பாடுகள் உள்ளன. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரமும் இல்லை. போலீஸார் உள்நோக்கத்துடன் தொடர்ந்துள்ள இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். பத்மா, இந்த மனுவுக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.Veeramani plea to be discharged from a sexual offence case: Court orders police responseதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; சமரசத்துக்கே இடமில்லை! மு.க. ஸ்டாலின்