தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!

Wait 5 sec.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை நிறைவேற்றுவது ஆட்சியருடைய பொறுப்பு என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டிய நிலையில், சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதா என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்குரைஞர் கேள்வி எழுப்பினார்.மேலும், கோயில் விவகாரத்தில் அனைத்தையும் நிர்வாக ரீதியாக செயல்படுத்திவிட முடியாது என்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிட்டார்.திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் பிற மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமா்வு முன் இன்று விசாரணை நடைபெற்றபோது, தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பறிப்பித்த உத்தரவை நிறைவேற்றுவது ஆட்சியருடைய பொறுப்பு என்று சுட்டிக்காட்டினர்.மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறுவது அரசமைப்பின் சீர்குலைவு என்ற நிலையை ஏற்படுத்திவிடாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதற்கு கோயில் விஷயத்தில் அனைத்தையும் நிர்வாக ரீதியாக செயல்படுத்த முடியாது. சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதா? என மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கேள்வி எழுப்பினார்.தூணில் தீபம் ஏற்றுவது ஏன் வேலையல்ல, எனது அதிகாரமும் அதற்குள் செல்லாது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவேன் என்று நீதிமன்றத்தில், கூறப்பட்டது, ஆனால், உரிய தூணில் தீபம் ஏற்றுவேன் என்று சொல்லவில்லை என்றும் ஆட்சிர் தரப்பில் கூறப்பட்டது.மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த நடத்தப்பட்ட கூட்டங்கள் முடிவுகள் அனைத்தும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பிரச்னை செய்ய முயன்ற 300க்கும் குறைவானோர்தான் கைது செய்யப்பட்டனர் என்றார் வழக்குரைஞர்.சட்டம் - ஒழுங்கு விவகாரர்தில் எந்தப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனத்துடன் இருந்தோம் என்று மதுரை காவல்துறை ஆணையர் தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. Has the order in the Sabarimala case been implemented? Query raised by the Madurai District Collector’s side