திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தலைமைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவு

Wait 5 sec.

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபமேற்றுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அரசு தரப்பில் நிறைவேற்றவில்லை என உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது வேதனை தெரிவித்தனர். மேலும், மலை உச்சியில் உள்ள கல் தூணில் நாளை (நவ. 28) தீபமேற்றவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், மதுரையில் நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டதாக வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அதிகாரிகள் மீதான அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தெளிவாகின்றன என்று தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய் குமார் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், அறநிலையத் துறை ஆணையர், மதுரை ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், கோயில் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைத்த உச்சநீதிமன்றம்!Supreme Court orders Chief Secretary to appear in person regarding the Tirupparankundram 'deepam' issue