அமெரிக்க ராணுவப் படைகள் திருடிச் சென்ற ஈரானின் 2 எண்ணெய்க் கப்பல்களும் மீட்கப்பட்டுள்ளதாக, ஈரானிய கடற்படை அறிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் போரைத் தொடர்ந்து, சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியுள்ளன. இதையடுத்து, ஹோர்முஸ் பகுதியில் அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து, ராணுவ நடவடிக்கையின் போது அமெரிக்க படைகள் கைப்பற்றிய ஈரானின் 2 எண்ணெய்க் கப்பல்களை மீட்டுள்ளதாக, ஈரானிய கடற்படைத் தளபதி ஷாராம் ஈரானி இன்று (நவ. 27) அறிவித்துள்ளார். இதுபற்றி, அவர் கூறுகையில், “அமெரிக்க ராணுவம் ஈரானின் 2 எண்ணெய்க் கப்பல்களைத் திருடியது. ஆனால், அந்தக் கப்பலிலிருந்த அவர்களின் பணியாளர்கள் உறங்கியபோது, எங்களின் படைகள் கப்பல்களுக்குள் ஏறி அவற்றை மீட்டு வந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இத்துடன், ஹோர்முஸ் பகுதியில் ஈரானின் அனுமதியின்றி செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க ராணுவம் கட்டணம் வசூலிப்பதாக, ஈரான் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரானின் எண்ணெய்க் கப்பல்கள் எப்போது திருடப்பட்டன, அவை எப்போது மீட்கப்பட்டன என்பவைக் குறித்து விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி அமெரிக்கா இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வெளிநாட்டு கப்பல்களை ஈரானிய படைகள் அனுமதித்து வருகின்றன. மற்ற வழிகளில் கப்பல்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகளை ஈரானிய படைகள் பொருத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய எல்லையில் நிலவரம் சீராக உள்ளது: சீன ராணுவம்The Iranian Navy has announced that two Iranian oil tankers, which had been stolen by U.S. military forces, have been recovered.