வந்தே பாரத் ரயில்களில் விமானங்களில் வழங்குவது போன்ற உணவு அறிமுகம்! வாவ் சொல்ல வைக்குமா?

Wait 5 sec.

நாட்டில் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட மூன்று வந்தே பாரத் ரயில்களில், விமானங்களில் வழங்குவது போன்ற உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.நீண்ட தொலைவு பயணிக்கும் ரயில்களில், குறைந்த வகையான உணவுகள், நல்ல தரத்துடன் வழங்குவது என்ற இலக்கை நோக்கி இந்திய ரயில்வே பயணித்து வருகிறது.அந்த வகையில், படுக்கை வசதிகொண்ட மூன்று வந்தே பாரத் ரயில்களிலும் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவுகளில் வழங்கப்படும் உணவு வகைகளைக் குறைத்திருக்கிறது.மேலும் விமானங்களில் வழங்கப்படும் உணவுகளைப் போல கச்சிதமான உணவு வகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதனை படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களில் முதல் முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. மும்பை - பெங்களூர், ஹௌரா - காமாக்யா, புது தில்லி - வாரணாசி நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் மூன்று வந்தே பாரத் ரயில்களிலும், தற்போது இருக்கும் உணவு வழங்குநர் அல்லது கிளவுட் சமையல் கூடங்களில் தயாரிக்கப்படாமல், மிகப்பெரிய உணவு தயாரிப்பு நிறுவனங்களிடம் விடப்படவிருக்கிறது.இது குறித்து விமானங்களில் உணவு வழங்கும் நிறுவனங்களிடமும் பேசப்பட்டுள்ளதாம்.அதன்படி, காலை உணவாக இட்லி-வடை அல்லது உப்புமா வழங்கப்படும். மதியம் மற்றும் இரவுக்கு சப்பாத்தி, சாப்பாடு, பருப்பு மற்றும் இணை உணவு, அதாவது கோழிக்கறி அல்லது காய்கறி போன்றவை வழங்கப்படும். மொத்த உணவின் எடை 700 - 750 கிராமிலிருந்து 450 - 500 கிராமாகக் குறைக்கப்பட்டது.இதன் மூலம், பயணிகளிடமிருந்து வரும் புகார்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, சூப், ஆம்லெட், சான்ட்விச், மோர், சாக்லேட், தயிர், சாலட், இனிப்புகள் என பல வகையான உணவுகளை மெனுவில் வைத்திருந்தது. Vande Bharat trains to introduce food service similar to that on flights! Will it leave passengers saying "wow"?