சாம்பியன்ஸ் லீக்கில் இன்றைய நாளில் நடந்த ஏழு போட்டிகளில் இரண்டு போட்டிகள் சமனிலும் (4 அணிகளுக்கு), ஐந்து போட்டிகள் வெற்றி, தோல்வியிலும் (10 அணிகள்) முடிந்துள்ளன. ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப் புகழப்படும் பலம்வாய்ந்த அணியான பயர்ன் மியூனிக்கை லில் எல்ஒஎஸ்சி அணி 2-1 என வென்று பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. இதேபோல் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி - ரோம் அணிகள் மோதிய போட்டி 2-2 என சமனில் முடிவடைந்தது. பிஎஸ்ஜியில் நட்சத்திர வீரர்கள் பலர் காயத்தினால் விளையாடாமல் இருக்கிறார்கள்.மான்செஸ்டர் யுனைடெட் அணியும் ஸ்போர்டிங் சிபி அணியும் மோதிய ஆட்டம் 2-2 என சமனில் முடிவடைந்தது. யுனைடெட் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். இண்டர் மிலன் அணி 2-0 என விஎஃப்பி ஸ்டட்கார்ட் அணியை வீழ்த்தியது. கேப்டன் லொடாரோ மார்டினேஸ் அசத்தல் கோல் அடித்தார். அத்லெடிகோ மாட்ரிட் அணி 2-0 என வைக்கிங் அணியை வீழ்த்தியது. இதில் சார்லோத், ஜூலியன் அல்வாரெஸ் கோல் அடித்தார்கள்.ஃபெனெர்பாஹ்சே எஸ்கே அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்சி ஷக்தார் டொனெட்ஸ்க்வை வீழ்த்தியது. பார்சிலோனா அணி 4-1 என சாபா அணியை வீழ்த்தியது. சாம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியல் 1. ரியல் மாட்ரிட் - 15 புள்ளிகள் 2. பிஎஸ்ஜி - 13 புள்ளிகள்3. கோமோ - 12 புள்ளிகள்4. பார்சிலோனா - 12 புள்ளிகள்5. லிவர்பூல் - 12 புள்ளிகள்6. ரியல் பெட்டிஸ் - 12 புள்ளிகள்7. ஆர்செனல் - 11 புள்ளிகள்8. மான்செஸ்டர் சிட்டி - 10 புள்ளிகள்Where is your team after matchday 5 #UCL pic.twitter.com/vjZxWmZqjv— UEFA Champions League (@ChampionsLeague) November 25, 2026சாம்பியன்ஸ் லீக்கில் பயர்ன் மியூனிக் அணிக்கு அதிர்ச்சி அளித்த எல்ஒஎஸ்சி! Inter Milan and Atlético secure wins..! PSG and Manchester United finish in a draw!