தனக்கும் கிளன் பிலிப்ஸுக்கும் நாளை மிகப் பெரிய வேலை காத்திருப்பதாக நியூசிலாந்து வீரர் டாம் பிளண்டெல் தெரிவித்துள்ளார்.இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (நவம்பர் 27) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டாம் லாதம் 59 ரன்கள், டெவான் கான்வே மற்றும் டேரில் மிட்செல் தலா 31 ரன்கள் எடுத்தனர். டாம் பிளண்டெல் 53 ரன்களுடனும், கிளன் பிலிப்ஸ் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இந்த நிலையில், சவாலான ஆடுகளத்தில் அணியை 300 ரன்களுக்கும் அதிகமாக கடக்கச் செய்யும் மிகப் பெரிய வேலை தனக்கும் கிளன் பிலிப்ஸுக்கும் உள்ளதாக டாம் பிளண்டெல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளம் தொடக்கம் முதலே சற்று மெதுவாக இருந்தது. இருப்பினும், முதல் நாளில் நியூசிலாந்து அணி விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சியளித்தது. நாளை எனக்கும் கிளன் பிலிப்ஸுக்கும் மிகப் பெரிய வேலை இருக்கிறது. நாங்கள் இருவரும் அணியை 300 ரன்களுக்கும் அதிகமாக கடக்கச் செய்ய வேண்டும். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் நன்றாக பந்துவீசினார்கள். கேப்டன் டாம் லாதம் நன்றாக விளையாடினார். முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன்கள் குவிக்கவில்லை. ஆனால், இரண்டாவது போட்டியில் அவர் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது என்றார்.New Zealand player Tom Blundell has stated that a massive task awaits both him and Glenn Phillips tomorrow.டெஸ்ட் கிரிக்கெட்டில் கிளன் பிலிப்ஸ் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார்: டாம் லாதம்