நடிகர் ஜெய் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படக்குழு விடியோ வெளியிட்டு இதனை உறுதிசெய்துள்ளது. ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 29ஆவது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ஜெய் நாயகனாகவும் பிரியங்கா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இவர் முன்னதாக சக்ரா படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜெய், பிரியங்கா மோகனுடன் யோகி பாபு, நாசர், ராஜீவ் மேனன், ஜிஎம் சுந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் பிறந்த நாளில் வெளியான போஸ்டரில் பிரெய்லி வடிவில் வாழ்த்துகள் வெளியாகியிருந்தது. அதனால், அவர் கண்பார்வைக் குறைபாடு உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்தப் படத்துக்கு கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கவிருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்ததை, படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. And that’s a wrap for #AGS29 ♥️Written & Directed by @anandanmsoffcl A @RaviBasrur Musical#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @archanakalpathi @aishkalpathi @Ags_production @venkat_manickam @priyankaamohan @Actor_Jai @iYogiBabu @actornasser @DirRajivMenon… pic.twitter.com/RSoPpYjq5Y— AGS Entertainment (@Ags_production) November 27, 2026திரைத்துறையில் மட்டும் ஏன் பாலின பாகுபாடு? மியா ஜார்ஜ் கேள்வி!AGS 29: Filming for the Jai - Priyanka Mohan starrer has wrapped up!