ஜம்மு-காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியுள்ளதையடுத்து, பள்ளத்தாக்கில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறையை அறிவித்துள்ளது.காஷ்மீர் பள்ளி கல்வி இயக்குநரின் உத்தரவின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 30 முதல் பிப்ரவரி 28, 2027 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடீ. அதேசமயம் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி பள்ளிகள் மூடப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே சரிந்துள்ளது. எனவே, மக்களின் இயல்பு வாழ்க்கை பெருளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரால் வறண்ட வானிலை நிலவி வருவதால், குழந்தைகள், முதியவர்கள் சுவாசப் பிரச்னைகளை எதிர்க்கொள்கின்றனர். பணவரவு உயருமா? உங்க ராசிக்கு என்ன பலன்? வார ராசி பலன்கள் (நவ. 27 - டிச. 3)