பெரியார் அறிவுலக ஊழல்! அகல் விளக்கு உரிமையாளரை காவலில் எடுத்து விசாரிக்க மனு!

Wait 5 sec.

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், நூலகங்களுக்கு ஏஐ மூலம் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை சப்ளை செய்த அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நூலகங்களுக்கு புத்தகங்கள் சப்ளை செய்த அகல் விளக்கு பதிப்பகத்துக்கு அரசுத் தரப்பில் ரூ.1.74 கோடி வழங்கியிருந்த நிலையில், அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியுள்ளது. இந்த நிலையில், மோகனை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.அந்த மனுவில், புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மோகன் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அவரிடம் விசாரணை நடத்த போதுமான அவகாசம் கிடைக்கவில்லை. அதனால், அவரை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.Periyar Arivulagam corruption - Petition filed to take the owner of 'Agal Vilakku' into custody for questioning!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை