அதிவேக இரட்டைச்சதம் விளாசிய இந்திய வீரர் சூர்யவன்ஷியை எமதர்மனாக சித்திரித்து ஜடேஜா கிண்டல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தாரின் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செவ்வாய்க்கிழமை வென்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 50 ஓவர்களில் 249/8 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்கம் முதலே அமீரகத்தின் பந்துவீச்சை சிதறடித்து ‘ருத்ரதாண்டவம்’ ஆடிய 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, 28 பந்துகளில் சதமும், 52 பந்துகளில் இரட்டைச் சதமும் விளாசினார். அவர் 53 பந்துகளில் 7 பௌண்டரிகள், 28 சிக்ஸர்களுடன் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளைத் தகர்ந்தெறிந்து புதிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆன இளம் சூறாவளி சூர்யவன்ஷிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். இந்திய முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ஷிகர் தவான் உள்ளிட்டோரும் சூர்யவன்ஷிக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள நிலையில், இந்திய வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சக வீரரான ரவீந்திர ஜடேஜா, சூர்யவன்ஷியை உயிரை எடுக்கும் கடவுளாகக் கருதப்படும் எமதர்மனாக சித்திரித்து கிண்டல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.Ravindra Jadeja posted a comical edited image of Vaibhav Sooryavanshi wearing a Mukut and depicted as the God of Death after the 15-year-old's record-breaking 204 off 53 balls against UAE.