உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படாதது ஏன்? என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் இன்று நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுளள்து.மேலும், மலை உச்சியில் உள்ள தூணில் விளக்கு ஏற்றப்படாதது குறித்து நான் மனதார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் மாவட்ட ஆட்சியர் தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படாதது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், உரிய நேரத்தில், தூண் இருக்கும் பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோயில் அறங்காவலர் குழுவிடம் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் தூண் பகுதியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.மாவட்ட நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் கோயிலின் அறங்காவலர் குழு, வழக்கமாக விளக்கேற்றப்படும் இடத்திலேயே தொடர்ந்து விளக்கேற்ற ஒருமனதாகத் தீர்மானித்ததாகவும் மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.மேலும், தூணில் விளக்கேற்றுவதற்கு எவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டதாக, தேவஸ்தானம் தரப்பிலிருந்து மாவட்ட ஆட்சியரிடம் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. கார்த்திகைத் தீபத்தன்று, மலை மீது விளக்கேற்றும் வகையில், மாலை 3 மணி வரை அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் செய்யப்பட்டு, சட்டம் - ஒழுங்கு பேணப்பட்டது. இதற்காக 5,797 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.ஆனால், மலை மீதுள்ள தூணில் விளக்கேற்றுங்கள் என்று, கோயில் அறங்காவலர் குழுவிடம் வலியுறுத்த எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, தூணில் தீபத்தை ஏற்ற முடியவில்லை என்று நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் எந்தவொரு உத்தரவையும் நான் வேண்டுமென்றே மீறவில்லை. இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் உத்தரவுகளை நான் மிகுந்த மரியாதையுடன் மதிக்கிறேன் என்று மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலைமீதிருக்கும் தூணில் விளக்கேற்றுவது தொடர்பான வழக்கில், கார்த்திகை தீபத்தன்று ஒரே ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டு, பல்வேறு நிபந்தனைகளையும் பிறப்பித்திருந்தது.நவ. 25ஆம் தேதி திருப்பரங்குன்றம் தூணில் விளக்கு ஏற்றப்பட்டது குறித்த அறிக்கையையும் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று, தீபம் ஏற்றப்படாதது ஏன் என்பது குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Why was a lamp not lit on the pillar at Tirupparankundram? Madurai District Collector submits report to the Supreme Court