தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர் என்று தமிழிசை கூறியுள்ளார். பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தன் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்த நிலையில் அமைச்சர் நிர்மல் குமார், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் எம்எல்ஏவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணையிலும் 'மாவட்ட ஆட்சியர் தரப்பில் இருந்து இன்னும் புகார் வரவில்லை' என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யிடம் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், "இப்பொழுது ஆட்சியரிடம் இருந்து புகார் வந்திருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது. குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று சொன்ன சட்டமன்ற உறுப்பினர் என்ன சொல்லப் போகிறார் அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ஏன் கூட்டணிக்கு பரிந்து பேசிய மாணிக்கம் தாக்கூர் என்ன சொல்ல போகிறார்.?பொய் சொல்வதை எவ்வளவு துணிச்சலாக சொல்கிறார்கள்? மறுபடியும் சொல்கிறோம் பெண்களைப் பாதுகாப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் இப்பொழுதாவது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.பதவியில் இருக்கும் பெண்களே இப்படி பரிதவிக்க வேண்டி இருக்கிறது என்றால்... சாமானிய பெண்களுக்கு உதவி செய்ய இந்த அரசு எப்படி முன் வரும்?தாமாக புகார் அளிப்பதுகூட தாமதமாகத்தான் முடிகிறது என்றால் தமிழ்நாட்டின் தங்கைகளின் நிலை என்ன?தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர் ஆகிறார்" என்று பதிவிட்டுள்ளார். இப்பொழுது ஆட்சியரிடம் இருந்து புகார் வந்திருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது... குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று சொன்ன சட்டமன்ற உறுப்பினர் என்ன சொல்லப் போகிறார் அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் ஏன் கூட்டணிக்கு பரிந்து பேசிய மாணிக் தாக்கூர் என்ன சொல்ல போகிறார்....?.. பொய்…— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) November 24, 2026Kallakurichi MLA is unfit for politics; how boldly they tell lies: Tamilisaiஇதை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? இபிஎஸ்