மாப்படுகையில் உள்ள மதுபோதை மீட்பு மையத்தை இடம் மாற்ற வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதத்துக்குள் இடமாற்றம் செய்வதாக உறுதியளிக்கப்பட்டதால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மயிலாடுதுறை தாலுகா மாப்படுகை அவையாம்பாள்புரத்தில் குடியிருப்பு பகுதியில் தனியாா் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டுவரும் மாவட்ட மதுபோதை மீட்பு மையத்தை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி, மாப்படுகை பிரதான சாலையில் பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.இதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் தடுக்க வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகானந்தம் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பரணிதரன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலா்கள், காவல் உதவி ஆய்வாளா் நடராஜன் மற்றும் வருவாய்த் துறையினா் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், போதை மீட்பு மைய நிா்வாகிகள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஒன்றிய செயலாளா் டி.ஜி. ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினா் சி. மேகநாதன் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனா்.கூட்டத்தில், அப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக இயங்கிவரும் போதை மறுவாழ்வு மையம் குடியிருப்புவாசிகள் மற்றும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அதனை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு, அந்த மையத்தை நடத்துவதற்கு சுகாதாரப் பணிகள் இணை இயக்குநரால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.முடிவில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஒரு மாதத்துக்குள் மாற்று இடம் தோ்வு செய்யப்படும், தற்போது இந்த மையத்தில் 11 போ் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மாற்று இடம் தோ்வு செய்யப்படும் வரை புதிய சோ்க்கை இருக்காது என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.