திருப்பரங்குன்றம் தூணில் ஏற்றப்படாத மகா தீபம்: மக்கள் ஏமாற்றம்

Wait 5 sec.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்படாதது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.முந்தைய ஆட்சியாளா்கள் இந்து மத கடவுள் எதிா்ப்பு கொள்கைக் கொண்டவா்கள் எனக் கருதப்படும் நிலையில், புதிதாக அமைந்த தவெக அரசு திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றும் நடைமுறையை அமல்படுத்தும் என மக்கள் நம்பினா்.தோ்தலுக்குப் பிறகு திருச்செந்தூா், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்த முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து, திருப்பரங்குன்றத்தில் இந்த ஆண்டு மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றும் என பக்தா்களும், பொதுமக்களும் பெரிதும் எதிா்பாா்த்தனா்.ஆனால், மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படாதது மக்களின் எதிா்பாா்ப்பைப் பொய்யாக்கியுள்ளது. இது குறித்து திருப்பரங்குன்றம் பகுதியைச் சோ்ந்த பல்வேறு தரப்பினா் தெரிவித்த கருத்துகள்:பிரசன்ன குமாரி: கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, மலை உச்சியில் உள்ள தூணில் வண்ணம் பூசுவது, தீப கொப்பரை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தாதது சந்தேகத்தையே ஏற்படுத்தியது. இருப்பினும், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றிய பிறகாவது மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவாா்கள் என எதிா்பாா்த்தோம். ஆனால், மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளனா். இதற்கு நிச்சயம் ஒரு விடிவுகாலம் பிறக்கும்; ஒரு நாள் நிச்சயம் மலை உச்சியில் உள்ள தூணில் மகா தீபம் ஏற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.விக்னேஷ் : இந்த ஆண்டு மலை மீதுள்ளதூணில் தீபம் ஏற்றப்படும் என பெரும் எதிா்பாா்ப்புடன் இருந்தோம். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதைச் செயல்படுத்தாதது உள்ளூா் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீா்ப்பையே மதிக்கவில்லை என்றால் நாடு எந்தத் திசையில் செல்லும் என்ற வருத்தம் ஏற்படுகிறது. இதுகுறித்து மக்கள் மத்தியில் மேலும் விழிப்புணா்வு மேம்பட வேண்டும்.காா்த்தியாயினி: உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவாா்கள் என எதிா்பாா்த்தோம். ஆனால், குடிமைப் பணி அலுவலரான மாவட்ட ஆட்சியரே நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் 144 தடை உத்தரவை பிறப்பித்தது சரியல்ல. அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சட்டத்துக்கு உள்பட்டு ஆட்சியா் செயல்பட்டிருக்க வேண்டும். இந்துக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசும், முந்தைய அரசைப் போலவே பெரும்பான்மை மக்களை ஏமாற்றிவிட்டது.கணேசன் (தலைவா், திருப்பரங்குன்றம் காய்கறி சந்தை): உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் என்ற நம்பிக்கையில், காய்கறி சந்தை வியாபாரிகள் அனைவரும் காலையில் தீபம் ஏற்றி கூட்டு வழிபாடு நடத்தினோம். தீபம் ஏற்றப்படாதது எங்களுக்கு பெரும் மன உளைச்சலை அளிக்கிறது. ஆண்டுக்கு ஒரு நாள் சில மணி நேரம் தீபம் ஏற்றுவதற்கு இங்குள்ள இஸ்லாமியா்கள் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. அனைவரும் ஒற்றுமையுடனேயே பழகுகிறோம். மலை தூணில் மகா தீபம் ஏற்றப்படாதது பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.உலகநாதன் (வியாபாரி) : கடைசி நேரத்திலாவது மலை தூணில் மகா தீபம் ஏற்றிவிடுவாா்கள் என உள்ளூா்மக்கள் காத்திருந்தனா். கடந்த முறை திமுக ஆட்சியில் ஏற்றப்படாததால், இந்த ஆண்டு தவெக அரசு நிச்சயம் தீபம் ஏற்றும் என எதிா்பாா்த்தோம். ஆனால், இந்த முறையும் ஏமாற்றமே கிட்டியுள்ளது.மாற்றம் தருவோம் என நம்பிக்கை அளித்து வாக்குகளைப் பெற்ற தவெக, முந்தைய திமுக ஆட்சியின் திட்டங்களை மட்டுமல்லாமல், பிற பழக்க, வழக்கங்களையும் அப்படியே கடைப்பிடிப்பது என்ன வகையான மாற்றம்? மக்களுக்கு வழக்கம்போல ஏமாற்றத்தைத்தான் தவெக அரசு பரிசளித்துள்ளது என்பது திருப்பரங்குன்றம் பகுதியைச் சோ்ந்த பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.தூணில் தீபம் ஏற்றாததற்கு கோயில் நிர்வாகமே காரணம்: மாவட்ட நிர்வாகம்திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு கோயில் தேவஸ்தானமே காரணம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக, தீபம் ஏற்றுவதற்கு ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்ற உத்தரவைக்கூட ஆட்சியர் நிறைவேற்றவில்லை என பல்வேறு தரப்பினரும் தெரிவித்தினர்.இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஒரு குழுவை நியமித்ததாகவும், இந்தக் குழுவை கோயில் தேவஸ்தானம் அங்கீகரிக்கவில்லை எனவும் மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படியே வழக்கமான இடத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது என கோயில் நிர்வாகம் தாமாக முன்வந்து விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.நெல்லையில் நயினார் நாகேந்திரன் கைது மதுரை செல்ல திட்டமிட்டிருந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலியில் மாநகர போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திரண்டு சென்று, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள அவருடைய வீட்டிலேயே நயினார் நாகேந்திரனை காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைத்தனர். மேலும், அவரது வீட்டைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனினும் அவர், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கட்சித் தொண்டர்களுடன் மதுரை நோக்கி காரில் புறப்பட்டார். திருநெல்வேலி மாநகர எல்லையான தச்சநல்லூர் சோதனைச் சாவடியை அவர் கடக்க முயன்றபோது, திருநெல்வேலி மாநகர போலீஸார் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர். அவருடன், திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் முத்துப்பலவேசம், பொதுச் செயலர்கள் வழக்குரைஞர் பாலாஜி கிருஷ்ணசாமி, நாகராஜன், சுரேஷ், தயாசங்கர், முருகராஜ் என 44 ஆண்கள், 6 பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு ஏமாற்றியுள்ளது: முன்னதாக, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், உச்ச நீதிமன்ற உத்தரவை கிள்ளுக்கீரையாக நினைத்து செயல்படுகிறார். அவர் ஆட்சியருக்கு உரிய அறிவுறுத்தலை வழங்கவில்லை. பிள்ளையார் கோயிலில் மட்டும் தீபத்தை ஏற்றிவிட்டு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ளது.இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடுத்து என்ன சொல்கிறார்களோ அதற்கேற்ப மேல்முறையீடு செய்வது தொடர்பாக பாஜக முடிவு எடுக்கும் என்றார்.தமிழிசை செளந்தரராஜன் கைதுதிருப்பரங்குன்றம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செüந்தரராஜனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மதுரை விமான நிலையத்திலிருந்து கையில் வேலுடன் தனது ஆதரவாளர்களுடன் அவர் வெளியே வந்தார். அப்போது, முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக போலீஸார் அவரைக் கைது செய்தனர். முன்னதாக அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இடைக்காலமானதாக இருந்தாலும், தமிழக அரசு வரம்பை மீறிச் செயல்படுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா, மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் ஆகியோர் இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கும் அரசு, எங்களை மட்டும் தடுத்து நிறுத்தி கைது செய்கிறது. கூட்டணி நிர்பந்தத்துக்குப் பணிந்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ததன் மூலம், வாக்களித்த மக்களுக்கு இந்த அரசு அநீதி இழைத்துள்ளது என்றார்.பாஜகவின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்: திருப்பரங்குன்றத்துக்கு வரவிடாமல் பாஜகவினர், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கருத்துச் சொல்வதற்கும், வழிபாடு செய்வதற்கும் இந்த ஆட்சியில் உரிமை மறுக்கப்படுகிறது. தமிழக அரசுக்கு சமாதானத்தைப் பற்றியோ, சட்டத்தைப் பற்றியோ, நியாயத்தைப் பற்றியோ பேச எந்தத் தகுதியும் இல்லை.திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து தவறிழைக்கிறது.எல்.முருகன் தடுத்து நிறுத்தம்திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை காரில் சென்ற முன்னாள் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அன்னூரில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார். இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன் அங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார். வீட்டுக் காவலில் அர்ஜுன் சம்பத்: கோவையில் உள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் திருப்பூரில் உள்ள இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோரைக் காவல் துறையினர் அவர்களது இல்லங்களிலேயே வீட்டுக்காவலில் வைத்தனர்.அமைச்சர் கருத்துஅமைச்சர் நிர்மல் குமார். திருப்பரங்குன்றம் மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை எக்ஸ் தளத்தில், திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.தவெக அரசுக்கு பாராட்டுதிருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்து செயல்பட்டதாக முதல்வர் விஜய்க்கும், மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.தொல்.திருமாவளவன்: நீதிபதிகளைப் போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட முடியாது. நீதிபதிகள் ஆவணங்கள், ஆதாரங்கள், சான்றுகள், சாட்சியங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள். ஆனால், மாவட்ட ஆட்சியர்களும் காவல் துறை அதிகாரிகளும் மாநில அரசின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. எனவே, மாநில அரசு நீதித் துறைக்கு அஞ்சாமல் துணிந்து இதை எதிர்கொள்ள வேண்டும். தமிழகத்தின் எதிர்காலம், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதியுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்த முதல்வர் விஜய்க்கு பாராட்டுகள்.பெ.சண்முகம்: உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மரபுகளையும், பாரம்பரியத்தையும் பின்பற்றும் வகையிலும், பல்வேறு நிலைகளில் கொடுக்கப்பட்ட கடும் அழுத்தங்களுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாமல் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் தவெக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.முதல்வருக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரியம் நன்றிதமிழகத்தின் தனித்தன்மையை நெஞ்சுரத்தோடு காப்பாற்றிய முதல்வர் ச.ஜோசப் விஜய்க்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் கே.நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நல்லிணக்கத்துக்கும், நல்லுறவுக்கும் முன்மாதிரியான தமிழகத்தின் பின்வாசல் வழியாக நல்லிணக்கத்தை கொளுத்தி அரசியல் குளிர் காய நினைத்தவர்களுக்கு தமிழகம் நல்லிணக்க மண் என்பதை நிரூபித்து இருக்கிறார் முதல்வர் ச.ஜோசப் விஜய். பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதும் தமிழகத்தின் தனித்தன்மையையும், ஒற்றுமையையும் காப்பதில் தமிழக அரசு உறுதியுடன் நின்றுள்ளது.ஹிந்துகளும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையோடும் சகோதரத்துவத்தோடும், உறவோடும் வாழும் மண் தமிழகம். காலம் காலமாக கட்டிக் காக்கும் இந்தச் சகோதரத்துவத்தை நாம் தொடர்ந்து கட்டிக்காப்போம் எனத் தெரிவித்துள்ளார்.பாஜக நிர்வாகிகளை முடக்குவது கண்டனத்துக்குரியது: எடப்பாடி கே.பழனிசாமிஎடப்பாடி பழனிசாமிபாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதன் நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைப்பது போல முடக்குவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் திருநெல்வேலி வீடு முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டு, அவரையும் பாஜக நிர்வாகிகளையும் சட்டவிரோதமாக வீட்டுக் காவலில் முடக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரையே சட்டவிரோதமாக முடக்குவது சரியல்ல. காவல் துறை மூலம் அரசே அச்சுறுத்துவதும், பதற்றத்தை உருவாக்குவதும் ஜனநாயகத்துக்கும், சட்டம், ஒழுங்குக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். இத்தகைய அடக்குமுறைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.டி.டி.வி.தினகரன் (அமமுக):ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனின் வாகனத்தை பின்தொடர்ந்து, வழிமறித்து காவல் துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தவெக அரசின் செயல்பாடுகளை விமர்ச்சித்துள்ள நிலையில், அதைத் திசைதிருப்பும் நோக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளைக் கைவிட்டு, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய காவல் துறையை அதிகார வர்க்கத்தின் ஏவல் கருவியாகப் பயன்படுத்துவதை தவெக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.கே.அண்ணாமலை (வீ தி லீடர்ஸ்): திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை துச்சமாக நினைத்து நடந்து கொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. அரசியல் அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்துக்கு உள்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசை அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திவிட்டது.