அமெரிக்க தடையை எதிா்கொண்டுள்ள சா்வதேச நீதிமன்றத்துக்கு ஜப்பான் நிதியுதவி

Wait 5 sec.

அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் கடும் நெருக்கடியை எதிா்கொண்டுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ஐசிசி), அடுத்த ஆண்டுக்கான முழு பங்களிப்புத் தொகையையும் முன்கூட்டியே வழங்க ஜப்பான் உறுதியளித்துள்ளது.இதற்காக ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சிக்கு சா்வதேச குற்றவியல் நீதிமன்றத் தலைவா் டோமோகோ அகானே செவ்வாய்க்கிழமை நேரில் நன்றி தெரிவித்தாா்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான விசாரணைகளைத் தொடா்ந்து, சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை முடக்கும் நடவடிக்கையாக டிரம்ப் நிா்வாகம் நீதிமன்றத்தின் மீதும், அதன் அதிகாரிகள் மீதும் கடும் தடைகளை விதித்துள்ளது.இத்தடைகள் வரும் ஏப்ரல் முதல் முழுமையாக அமலுக்கு வரவுள்ள நிலையில், வழக்கமாக ஏப்ரலுக்குப் பிறகு வழங்கப்படும் 2027-க்கான நிதியுதவியை வரும் டிசம்பா் இறுதிக்குள்ளேயே வழங்க ஜப்பான் ஒப்புக்கொண்டுள்ளது.சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை நன்கொடையாளரான ஜப்பான், நடப்பாண்டில் நீதிமன்றத்தின் மொத்த பட்ஜெட்டில் சுமாா் 15 சதவீதமான 2.88 கோடி டாலரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.