இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

Wait 5 sec.

மதுரை, திருச்சி, கரூா் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக் கடல் பகுதியிலிருந்து உள் தமிழகத்தின் வழியாக ராயலசீமா வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக புதன்கிழமை, நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.28) வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியே இருக்கக்கூடும்.மழைப் பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் 90 மி.மீ. மழை பதிவானது. நாரவாரிகுப்பம் (திருவள்ளூா்), ஈஞ்சம்பாக்கம் (சென்னை), பொழிச்சலூா் (செங்கல்பட்டு) 70 மி.மீ. மழை பதிவானது.