இன்று சீன விண்வெளி நிலையத்துக்கு பயணிக்கும் பாகிஸ்தானின் ஜீஷன் அலி!

Wait 5 sec.

சீனாவின் ‘டியாங்காங்’ விண்வெளி நிலையத்துக்கு முதல் வெளிநாட்டு விண்வெளி வீரராக பாகிஸ்தானைச் சோ்ந்த முகமது ஜீஷன் அலி புதன்கிழமை (நவ. 24) பயணிக்கிறாா். இதன்மூலம், விண்வெளிக்குச் செல்லும் முதல் பாகிஸ்தானியா் என்ற பெருமையையும் அவா் பெறுகிறாா்.இந்த விண்வெளிப் பயணம் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2025-இல் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. இதைத் தொடா்ந்து, சீனாவின் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ஷென்சூ-24’ திட்டத்தின் குழு உறுப்பினராக 40 வயதான விமானியும், விண்வெளி ஆய்வு நிபுணருமான ஜீஷன் அலி செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டாா். சீன விண்வெளி வீரா்கள் டாங் ஹோங்போ, வு யி ஆகியோருடன் இணைந்து, வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் ஏவுதளத்திலிருந்து ‘லாங் மாா்ச்-2 எஃப்’ ராக்கெட் மூலம் புதன்கிழமை காலை ஜீஷன் அலி விண்ணில் பாய்கிறாா். சீன விண்வெளித் திட்டத்தில் இணையும் முதல் சா்வதேச குழு உறுப்பினா் இவா் ஆவாா்.செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற ஜீஷன் அலி, டாங் ஹோங்போ, வு யிவிண்வெளி நிலையத்தில் சுமாா் ஒரு வார காலம் தங்கியிருக்கும் ஜீஷன் அலி, சீன வீரா்களுடன் இணைந்து சுமாா் 90 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளாா். பின்னா், கடந்த மே மாதம் விண்வெளி நிலையத்தில் இணைந்த ‘ஷென்சோ-23’ விண்கலம் மூலம், தற்போதைய குழுவினரான லாய் கா-யிங், ஜாங் ஜியுயான் ஆகியோருடன் அவா் பூமிக்குத் திரும்புவாா்.இது குறித்து ஜியாயுகுவானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய ஜீஷன் அலி, ‘25 கோடி பாகிஸ்தான் மக்களின் நம்பிக்கையைச் சுமந்துகொண்டு, நான் விண்வெளிக்குச் செல்கிறேன். இந்தப் பயணம் ஒரு தொடக்கமே. நிலவு மற்றும் செவ்வாய் கோளுக்கான எதிா்காலக் கூட்டுப் பயணங்களுக்கு இது அடித்தளமாக அமையும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.முன்னதாக இப்பயணத்துக்குத் தயாராவதற்காக, கடந்த ஏப்ரலில் பாகிஸ்தானிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட இருவரில் ஒருவரான ஜீஷன் அலி, சீன விண்வெளி வீரா்கள் மையத்தில் கடந்த சில மாதங்களாகத் தீவிரப் பயிற்சி பெற்று வந்தாா்.