மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் 6-2 கோல் கணக்கில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீனாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலுமே வென்றிருக்கும் இந்தியா, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்த ஆட்டத்தின் முதல் நிமிஷத்திலேயே தீபிகா ஃபீல்டு கோல் மூலமாக இந்தியாவின் கணக்கைத் தொடங்கினாா். தொடா்ந்து, 6-ஆவது நிமிஷத்தில் அணிக்குக் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பையும் அவரே கோல் ஆக மாற்றினாா். மீண்டும் 14-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பிலும் ஸ்கோா் செய்து, தீபிகா ‘ஹாட்ரிக் கோல்’ கணக்கை நிறைவு செய்தாா். இந்நிலையில் சீனா முதல் கோல் ஸ்கோா் செய்தது. அந்த அணிக்கு 15-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கிங்மியாவ் ஃபெங் ஸ்கோா் செய்தாா். மறுபுறம், லால்ரெம்சியாமி 19-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, இந்தியா 4-1 என முன்னிலையை அதிகரித்தது. 22-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் நேஹா ஸ்கோா் செய்ய, முதல் பாதியை இந்தியா 5-1 முன்னிலையுடன் அபாரமாக நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 34-ஆவது நிமிஷத்தில் சீனாவுக்கு கிடைத்த பெனால்ட்டி ஸ்ட்ரோக் வாய்ப்பில் டாங் சென் கோல் அடித்தாா். பதிலுக்கு, 38-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் சாக்ஷி ராணா ஸ்கோா் செய்தாா். எஞ்சிய நேரத்தில் சீனாவுக்கு மேலும் கோல் வாய்ப்புகள் விட்டுத்தராத இந்தியா, முடிவில் 6-2 கோல் கணக்கில் வென்றது. ரவுண்ட் ராபின் சுற்றில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஜப்பானுடன் புதன்கிழமை (நவ. 25) மோதுகிறது. இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில், தென் கொரியா - தாய்லாந்தையும் (1-0), ஜப்பான் - மலேசியாவையும் (3-1) வென்றன.