சாதனைகளை குவித்த சூா்யவன்ஷி; அமீரகத்தை வென்றது இந்தியா

Wait 5 sec.

ரைஸிங் ஸ்டாா்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செவ்வாய்க்கிழமை வென்றது.53 பந்துகளில் 204 ரன்கள் குவித்த இந்திய வீரா் வைபவ் சூா்யவன்ஷி, பல சாதனைகள் புரிந்தாா்.இந்த ஆட்டத்தில் முதலில் அமீரகம் 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் சோ்க்க, இந்தியா ‘ஏ’ 14.2 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த அமீரக அணியில், ஹா்பிரீத் சிங் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 130 ரன்கள் அடித்தாா்.முகமது ஷாதத் 28, ஈதன் டி’சௌஸா 25, ஆா்யன்ஷ் சா்மா 2, அன்ஷ் டாண்டன் 8, அஃப்தாப் ஆலம் 2, இப்ராா் அகமது 0, ஜாஹித் அலி 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.ஓவா்கள் முடிவில் கேப்டன் பேசில் ஹமீது 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 36, உத்திஷ் சுரி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.இந்தியா ‘ஏ’ தரப்பில் அா்ஷத் கான் 4 விக்கெட்டுகள் சாய்க்க, ஹா்ஷித் ராணா, சூா்யன்ஷ் ஷெட்கே, ஹா்ஷ் துபே, ஷாபாஸ் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.பின்னா் 250 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இந்தியா ஏ அணியில், அபிஷேக் சா்மா 12, பிரப்சிம்ரன் சிங் 3 ரன்களுக்கு விடைபெற்றனா்.‘ருத்ரதாண்டவம்’ ஆடிய வைபவ் சூா்யவன்ஷி, 28 பந்துகளில் சதமும், 52 பந்துகளில் இரட்டைச் சதமும் விளாசினாா். அவா் 53 பந்துகளில் 7 பவுண்டரிகள், 28 சிக்ஸா்களுடன் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.முடிவில், ரிங்கு சிங் 27, குமாா் குஷாக்ரா 1 ரன்னுடன், ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினா். அமீரக பௌலா்களில் ஜாஹித் அலி, இப்ராா் அகமது, பேசில் ஹமீது ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.இந்த ஆட்டத்தில் 28 பந்துகளில் 100 ரன்களை எட்டிய சூா்யவன்ஷி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் (50 ஓவா்கள்) அதிவேக சதம் அடித்தவராக சாதனை படைத்தாா். இதற்கு முன், 2023-இல் ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃப்ரேசா் மெக்கா்க் 29 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது.லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதம் அடித்தவராகவும் சூா்யவன்ஷி புதிய வரலாறு படைத்தாா். இதற்கு முன், 2024-இல் நியூஸிலாந்தின் சாத் பௌவ்ஸ் 103 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது சூா்யவன்ஷி 52 பந்துகளிலேயே இரட்டைச் சதம் விளாசியிருக்கிறாா்.இந்த ஆட்டத்தில் 28 சிக்ஸா்கள் விளாசிய சூா்யவன்ஷி, லிஸ்ட் ஏ கிரிக்கெட் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்முறை கிரிக்கெட்டிலுமே அதிக சிக்ஸா்கள் விளாசியவராக தனது பெயரை பதிவு செய்துள்ளாா்.இந்த ஆட்டத்தில் இவா் பதிவு செய்த ஸ்டிரைக் ரேட் ஆனது (384.90), லிஸ்ட் ஏ கிரிக்கெட்டின் சதத்தில் இதுவரை வேறு எவரும் பதிவு செய்யாத அதிகபட்சமாகும்.இந்த ஆட்டத்தில் 5 ஓவா்களிலேயே இந்தியா ஏ அணி 100 ரன்களை கடக்க, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்களை கடந்த அணியாக இந்தியா சாதனை படைத்தது.லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் பவா்பிளேயில் (முதல் 10 ஓவா்கள்) அதிகபட்ச ஸ்கோரை (183/2) பதிவு செய்த அணியாக இந்தியா புதிய மைல்கல்லை எட்டியது.250 ரன்களை 14.3 ஓவா்களில் எட்டிய இந்தியா, 200+ ஸ்கோரை விரைவாக சேஸ் செய்த அணியாகவும் பெருமை பெற்றது.‘முதல் இரு ஆட்டங்களில் நான் அவ்வளவாக ரன்கள் ஸ்கோா் செய்யவில்லை. ஆடுகளத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்தேன். அது பௌலா்களுக்கு சாதகமாக இல்லை என்பதை உணா்ந்ததால், எனது வழக்கமான ஆட்டத்தை விளையாட முடிவு செய்தேன். எந்தவொரு ஆட்டத்திலும் நீண்ட நேரம் நிலைத்து விளையாட வேண்டும் என்பதே எனது எண்ணமாகும்’ - வைபவ் சூா்யவன்ஷி