திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ஏன்? உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

Wait 5 sec.

திருப்பரங்குன்றத்தில் மலை மீது உள்ள தூணில் இன்று ஒரு நாள் மட்டும் விளக்கேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.இந்த மனு விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இதனை விசாரிக்கக் கூடாது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.இதனைக் கேட்ட மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி, அரசு தரப்பால் இந்த வழக்கு விசாரிக்க பொருத்தமற்றது என்று நீங்கள் கருதினால் விசாரணைக்கு வாதங்களை முன் வைக்காமல் அமர்ந்துவிடுங்கள், உங்கள் வாதத்தை முன் வைக்க வேண்டாம் என்று கூறினார்.நீங்கள் வழக்கு விசாரணை பொருத்தமற்றது என்று கூறினாலும், நாங்கள் வழக்கை விசாரிப்போம் என்றும் நீதிபதி கூறியிருக்கிறார்.மேலும், நீங்கள், இங்கே கொடுத்திருக்கும் பதில் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும், என்றும் எச்சரித்த நீதிபதி, நீங்கள் இளம் ஐஏஎஸ் அதிகாரி என்பதால், நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொள்வீர்கள் போல தெரிகிறது என்றார்.சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருப்பரங்குன்றத்துக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.முன்னதாக, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கும் வகையில் நவ. 24ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தீபத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை நகரம் மற்றும் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மதுரை மாநகர காவல் ஆணையர் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.தற்போது, இன்று மதல் நவ. 25 மாலை 6 மணி வரை பக்தர்கள், மக்கள் செல்லத் தற்காலிகத் தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியது; அதே உத்தரவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சில பத்திகளையும் இடைநிறுத்தியது.விளக்கேற்றும் பணியானது, தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் அடங்கிய குழுவினரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.அத்தகைய நபர்களின் அமைப்பு மற்றும் எண்ணிக்கையை, மதுரை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.இதனால், திருப்பரங்குன்றம் மலைப் பகுதி மற்றும் கிரிவலம் செல்லும் பாதைப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.