நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் வாரணாசி திரைப்படம் 18 திரையரங்க வடிவங்களில் வெளியாகவுள்ளதாம். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வாரணாசி. கதையாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் கடந்த ஓராண்டுக்கும் அதிகமாக இதன் பணிகள் நடைபெற்று வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய சினிமாவின் அடுத்தகட்ட பாய்ச்சலாகவும் இருக்கும் எனத் தெரிகிறது.இப்படத்தில் நாயகனாக மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். ராஜமௌலியின் முந்தைய படமான 'ஆர்ஆர்ஆர்'-க்காக ஆஸ்கர் விருது வென்ற எம். எம். கீரவாணி 'வாரணாசி' படத்திற்கு இசையமைக்கிறார்.ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றன. ஆயிரம் கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக இப்படம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் திரையரங்க வெளியீட்டை ஐமேக்ஸ், டால்பி விஷன், 4 டிஎக்ஸ் (4 DX) உள்பட 18 திரையரங்க வடிவங்களில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனராம். இதுவே, இந்தச் சாதனையை செய்யும் முதல் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. உலக அளவில் இப்படத்தைக் கொண்டு செல்வதற்கான வழிகளிலும் இந்த முயற்சி பெரிய உதவியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தெரிந்துதான் பேசுகிறாரா? வெற்றி மாறனை விளாசும் ரசிகர்கள்!The film Varanasi, starring actor Mahesh Babu, is set to be released in 18 different theatrical formats.