செக்கானூரணி வழக்கில், உடற்கூராய்வில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடலில் காயங்கள் இருந்தது உறுதியான நிலையிலும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.மதுரை அருகேயுள்ள செக்கானூரணி காவல் நிலையத்தில், ஏலக்காய் ஏற்றி வந்த தனது லாரி எரிந்துவிட்டதாக புகார் கொடுக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் நவ. 14 அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தனது கணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, காப்பீடு பெறுவதற்கு குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அவரை துன்புறுத்தியிருக்கிறார்கள் என அவரது மனைவி கூறியிருந்தார்.இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல்ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில் அவரது உடலில் ரத்த காயங்கள், கழுத்து இறுக்கப்பட்டது, இதயம், மூளை, நுரையீரலில் வீக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். உடற்கூராய்வில் பாலகிருஷ்ணன் உடலில் காயங்கள் இருந்தது உறுதியான நிலையிலும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்து வழக்கை ஒத்திவைத்துள்ளார். Madurai HC Judge questions police on Chekkanurani caseபெண்களின் பாதுகாப்பைவிட தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியமா? கனிமொழி