புத்தாண்டை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அன்லிமிட்டெட் டேட்டா திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில், தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது.இதன் ஒரு பகுதியாக புத்தாண்டு 2.0 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.ஜியோவின் 'ஹேப்பி நியூ இயர் 2.0' (Happy New Year 2.0) திட்டங்கள்ரூ. 399 அன்லிமிடெட் டேட்டா திட்டம்ரூ. 399-க்கு ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் (voice calls) மற்றும் நாள்தோறும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை பெறலாம். இந்தத் திட்டம் 28 நாள்கள் செல்லுபடியாகும். கூடுதல் சேவைகள்ரூ. 4,000 மதிப்புள்ள கேன்வா ப்ரோ (Canva Pro) 12 மாதங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, ஜியோ டிவி, ஜியோ கேம்ஸ், ஜியோ ஏஐ க்ளெளட் 50 ஜிபி சேமிப்பு வசதி உள்ளிட்டவை பயன்படுத்திக் கொள்ளலாம்.ரூ. 3999 ஆண்டு சந்தாரூ. 3999-க்கு ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சேவைகளை ஓராண்டுக்கு பெறலாம். வரம்பற்ற குரல் அழைப்புகள் (voice calls) மற்றும் நாள்தோறும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். ரூ. 1,590 மதிப்புள்ள கேன்வா ப்ரோ லைட், ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, ஜியோ ஏஐ க்ளெளட் 50 ஜிபி சேமிப்பு உள்ளிட்டவை பயன்படுத்திக் கொள்ளலாம்.ஜியோவின் ரூ. 50 நைட் டேட்டா பேக், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது.ரூ. 50-க்கு 'அன்லிமிடெட் நைட் டேட்டா'ரூ. 50-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாள்களுக்கு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிவரை வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்.இது பயனரின் வழக்கமான பகல் நேர டேட்டா இருப்பிலிருந்து தனிப்பட்டது.எனவே, இரவில் செய்யப்படும் பதிவிறக்கங்கள், ஸ்ட்ரீமிங் உள்ளிட்டவைக்கு, பயனரின் முதன்மைத் திட்டத்தில் உள்ள டேட்டா பயன்படுத்தப்படாது.இந்த திட்டம் மாணவர்கள், இரவு நேரப் பணியாளர்கள், கேமர்கள் மற்றும் பெரிய அளவிலான கோப்புகளை இரவு நேரத்தில் பதிவிறக்கம் செய்ய விரும்பும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மேலும், ரூ. 15-க்கு 24 மணிநேரத்துக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவும், ரூ. 25-க்கு 48 மணிநேரத்துக்கும் புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.ஜியோவின் ரூ.3,999, ரூ. 399, ரூ. 15, ரூ. 25 ஆகிய அன்லிமிடெட் டேட்டா திட்டங்கள் இன்று (நவ. 24) முதல் அமலுக்கு வந்துள்ளன. ரூ. 50 அன்லிமிடெட் நைட் டேட்டா திட்டம் வருகின்ற நவ. 26 முதல் பயனர்களுக்கு கிடைக்கும்.Unlimited data for 28 days for Rs. 50! Jio launches new offer!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! விசாரணை நவ. 27-க்கு ஒத்திவைப்பு!