புதுதில்லி: அதிகரித்து வரும் செலவுகளால், குறிப்பிட்ட கார் மாடல் மற்றும் வேரியன்ட்களின் விலையை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அதிகபட்சம் ரூ.8,000 வரை உயர்த்த ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.தனது கார் விற்பனை வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் மற்றும் வேரியன்ட்களுக்கு டிசம்பர் 1, 2026 முதல் சிறிய அளவிலான விலை உயர்வை அமல்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.விலை உயர்வின் அளவு மாடலை பொறுத்து மாறுபடும் என்றும் இது அதிகபட்சமாக இது ரூ.8,000 வரை இருக்கும் என்றது.இந்த சமீபத்திய விலை உயர்வானது, நடப்பு ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் அமல்படுத்தியுள்ள 1.4 சதவீத விலை உயர்வுடன் கூடுதலாக இருக்கும். கடந்த செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 0.4 சதவீத விலை உயர்வும் இதில் அடங்கும்.இரண்டாம் காலாண்டில் அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலையானது ஹூண்டாயின் லாபத்தை பாதித்துள்ளது. இதன் விளைவாக லாப வரம்பு 13.9 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதமாகக் குறைந்தது. இதனையடுத்து 2வது காலாண்டில், வாகன உற்பத்தியாளரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு கிட்டத்தட்ட 24 சதவீதம் சரிந்தது.Hyundai Motor India said it plans to increase prices of select models and variants by up to Rs 8,000 from December 1.