திருப்பரங்குன்றம்: உத்தரவை செயல்படுத்த வேண்டும்- மதுரைக் கிளை! - நேரலை!!

Wait 5 sec.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் செவ்வாய்க்கிழமை (நவ. 24) கைது செய்யப்பட்டுள்ளனர்.உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி, 144 தடை உத்தரவை எதிர்த்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைதிருப்பரங்குன்றம்: நீதிபதிகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட முடியாது - விசிகதிருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் செவ்வாய்க்கிழமை (நவ. 24) தெரிவித்துள்ளார்.அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல்: நயினார் நாகேந்திரன்எந்தவித சட்டப்பூர்வ தடையுத்தரவும் இல்லாத நிலையில், என்னை வழிபாட்டிற்குச் செல்ல விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். கைது செய்வதாகக் கூறி எங்களை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுப்பது ஒரு தனிமனிதனின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும் என நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை காவல் துறையினர் இன்று (நவ. 24) கைது செய்தனர். நெல்லையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட நயினார் நாகேந்திரனை தாழையூத்து பகுதியில் தடுத்து நிறுத்தி காவல் துறையினர் கைது செய்தனர்.மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!திருப்பரங்குன்றத்தில் காவல் துறை சோதனை!தீபத்திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றத்தில் மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வளாகம் மற்றும் கோயிலின் வெளிப்புறப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பரங்குன்றத்தில் மோப்பநாய் உதவியுடன் காவல் துறை சோதனை!திருப்பரங்குன்றம்: வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம்திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 24) தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.திருப்பரங்குன்றம்: வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம்திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் விசாரணைதிருப்பரங்குன்றம் தீப விவகார மனுக்கள் தொடர்பான விசாரணையை பிற்பகல் 4 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஒத்திவைத்திருந்தது. தற்போது மீண்டும் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.