திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை அதற்கான எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக இந்து அமைப்புகள் போராட கூடும் என்பதால், காவல்துறை சார்பில் கிரிவல பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோயில் வாசல் பகுதியில் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்து பேருந்தில் அழைத்துச் செல்வதற்காக கிரிவலப் பாதையில் பேருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவை அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைThiruparankundram No steps have been taken yet to light a lamp on the pillar