பார்வையற்றோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஒரு பந்துகூட வீசப்படாமல் பாகிஸ்தான் அணியை சாம்பியன் என அறிவித்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் துர்காராவ் கேள்வியெழுப்பியுள்ளார்.பார்வையற்றோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று முன் தினம் (நவம்பர் 20) விளையாடுவதாக இருந்தன. டாக்காவில் நடைபெறவிருந்த இந்த இறுதிப்போட்டி மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இருப்பினும், குரூப் ஸ்டேஜ் நெட் ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த நிலையில், ஒரு பந்துகூட வீசப்படாமல் பாகிஸ்தானை சாம்பியன் என அறிவித்ததை ஏற்க முடியாது எனவும், நடுவர்களிடம் இந்த முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம் எனக் கூறியதாகவும் இந்திய அணியின் கேப்டன் துர்காராவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: வானிலை சரியானால் மட்டுமே போட்டி தொடங்கும் என நடுவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். போட்டிக்கான கட் ஆஃப் நேரம் 4-4:15 என நிர்ணயித்தார்கள். மழை நின்றால், குறைந்தது 5 மணிநேரம் போட்டி நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு இருந்தது. இருப்பினும், 4 - 4:15 மணி ஆனதும் போட்டி நடுவர்கள் என்னையும், அணியின் மேனேஜரையும் அழைத்து, பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றதாக முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இந்திய அணி இரண்டாமிடம் என்றும் தெரிவித்தனர். குரூப் ஸ்டேஜ் ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி சாம்பியன் என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.CABI President raises serious concerns over WBCC President Sultan Shah’s alleged interference in the Technical Committee’s decision to declare India and Pakistan joint winners of the Asia Cup 2026 Final.CABI questions the fairness and transparency of the decision.#CABI pic.twitter.com/9Y8c7pA19f— Cricket Association for the Blind in India (CABI) (@blind_cricket) November 22, 2026நாங்கள் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை, இந்த முடிவுக்கு எதிராக கேள்வி எழுப்பினோம். அப்போது, போட்டி டிரா ஆனால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் விதி 27-ன் அடிப்படையில் முடிவெடுத்ததை காரணமாகக் கூறினர். ஆனால், இறுதிப்போட்டி நடைபெறவில்லை. போட்டியில் ஒரு பந்துகூட வீசப்படவில்லை. அதனால், பாகிஸ்தானை சாம்பியன் என அறிவித்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.போட்டி நடைபெறாமலேயே பாகிஸ்தான் அணி சாம்பியன் என அறிவிக்கப்பட்டதற்கு இந்திய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கம் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவரும் இணைந்து சாம்பியன் பட்டத்தை பகிர்ந்துகொண்டதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.The captain of the Indian team has raised questions regarding the decision to declare Pakistan the champions of the Asia Cup cricket tournament for the visually impaired, even though not a single ball was bowled in the final.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து வில் ஜாக்ஸ் விலகல்! இங்கிலாந்துக்கு சிக்கலா?