பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு 'துளியும் புரிதல் இல்லை': ராகுல் காந்தி

Wait 5 sec.

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு நமது ஆன்மீக மற்றும் மத மரபுகள் குறித்து துளியும் புரிதல் இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய ஆன்மீக மற்றும் மத மரபுகளை ஆழமாக ஆராய ஆராய, ஒரு விஷயம் தெளிவாகிறது.பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும் பண்பாடு இல்லாத, பேராசை கொண்ட, சாதியவாதம் பேசும் மற்றும் ஆண் ஆதிக்க மேலாதிக்கத்தை மட்டுமே முன்னிறுத்தும் அமைப்புகள். இவர்களுக்கு நமது ஆன்மீக மற்றும் மத மரபுகளைப் பற்றி துளியும் புரிதல் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.The deeper I go into Indian spiritual and religious traditions, the clearer it becomes.The BJP and RSS are uncouth, greedy, casteist male chauvinists with absolutely no understanding of our spiritual and religious traditions. https://t.co/CrJxkEXNgI— Rahul Gandhi (@RahulGandhi) November 22, 2026 மகாராஷ்டிரத்தில் உள்ள எலிபண்டா குகைகளில் உள்ள சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், தனது பெற்றோரின் அன்பு குறித்து பேசிய கருத்துக்கு பாஜக தலைவர்கள் விமரிசனம் செய்திருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆண், பெண் சமத்துவம் மற்றும் அன்பை வலியுறுத்தும் விதமாக ராகுல் தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.The BJP and RSS are uncouth, greedy, casteist male chauvinists with absolutely no understanding of our spiritual and religious traditions.தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்ததால் விலை குறைந்தது: பிரதமர் மோடி