பிரிட்டனைச் சேர்ந்த நீச்சல் வீரர், ஹோர்முஸ் நீரிணையில் நீச்சலடித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.போரினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஹோர்முஸ் நீரிணையில் நீச்சலடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த நீச்சல் வீரர் லூயிஸ் பக். 56 வயதான இவர், கடல்வாழ் உயிரினங்களுக்கான ஐ.நா. ஆதரவாளராக உள்ளார். உலகில் உள்ள அனைத்து கடல்களிலும் நீண்ட தூரம் நீச்சலடித்து பல சாதனைகளைப் படைத்துள்ளார். இந்நிலையில், ஈரான் - அமெரிக்கா மோதல் மற்றும் போரினால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியுள்ள ஹோர்முஸ் நீரிணையில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு நீச்சல் அடித்து லூயிஸ் சாதனை படைத்துள்ளார். ஓமன் நாட்டின் தீபகற்ப முச்சந்தியில் தொடங்கி ஹோர்முஸ் முனையைச் சுற்றி, பகுதி பகுதியாக பிரித்து 3 நாள்களில் மொத்தம் ஆறரை மணி நேரம் நீச்சலடித்துள்ளார். போரினால் நாடுகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு, டால்பின்கள், கடல் ஆமைகள், பவளப் பாறைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த சாகசத்தை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.I have just completed a three-day swim through the Strait of Hormuz. I went there to bring attention to the devastating environmental cost of war.Associated Press has published the first account of the swim. Please read it, and help share it.https://t.co/zWm3DAm9eBPhotos:… pic.twitter.com/ghMzMXU3JF— Lewis Pugh (@LewisPugh) November 21, 2026ட்ரோன் தாக்குதல்! 2 நாள்களாக தீப்பற்றி எரியும் ரஷிய சரக்குக் கப்பல்!Swimming in the Strait of Hormuz Viral video of a 56-year-old man’s daring feat