தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வரும் கல்வி விருது விழாவின் இரண்டாம் கட்ட நிகழ்வு நவ. 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.நடப்பாண்டிற்கான கல்வி விருது விழா முதல்கட்டமாக கடந்த 4 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் வடமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.தற்போது இரண்டாம் கட்டமாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 26 ஆம் தேதி நடக்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். 27- ஆம் தேதி நடைபெறும் விழாவில் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.TVK’s 2nd phase of educational awards ceremony: Planned for Nov. 26 and 27!