ஆர்யா நடிக்கும் ஹலோ காதல் படத்தின் டிரைலர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக தோல்விப்படமானது.தற்போது, பா. இரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வேட்டுவம் அடுத்தாண்டு பொங்கலன்று திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் ’ஹலோ காதல்’ என்ற படத்தில் ஆர்யா நடித்துள்ளார்.ஆர்யாவின் 40-வது திரைப்படமான இதில் நாயகிகளாக நடிகைகள் நிகிலா விமலும் வைஷ்ணவி சைதன்யாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் அறிமுக டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (நவ. 23) வெளியாகவுள்ளது. ஹலோ காதல் திரைப்படம் வருகிற டிச. 4 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஃபகத் ஃபாசில் தயாரிக்கும் பிக்னிக்! தமிழில் அறிமுகமாகும் சந்தீப்! 'Hello Kadhal' starring Arya: Trailer announcement!