போலி பரிவா்த்தனைகள் மற்றும் மோசடி இணைய இணைப்புகள் மூலம் கிரிப்டோகரன்சி வா்த்தகரிடம் சுமாா் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த 4 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த ஜூன் 6-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட கிரிப்டோகரன்சி வா்த்தகா் தனது டிஜிட்டல் நாணயமான யுஎஸ்டிடி விற்க முயன்றுள்ளாா். அப்போது, வாங்குபவா் போலத் தொடா்புகொண்ட மோசடி கும்பலைச் சோ்ந்தவா்கள், அவருக்கு மோசடி இணைய இணைப்பை அனுப்பியுள்ளனா். அதைத் திறந்ததன் மூலம் அவரது டிஜிட்டல் வாலட்டுக்குள் ஊடுருவி, 4,985 யுஎஸ்டிடி நாணயங்களைத் திருடியுள்ளனா். இதன் இந்திய மதிப்பு சுமாா் ரூ.5 லட்சமாகும்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின்பேரில், தென்மேற்கு தில்லி மாவட்ட சைபா் குற்றப்பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.இதில், ராஜஸ்தானைச் சோ்ந்த அதுல் மீனா (21), ஜக்மோகன் மீனா (19), நரேந்தா் குமாா் மீனா (22), மனீஷ் மீனா (24) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.விசாரணையில், இந்தக் கும்பல் இளைஞா்களைச் சோ்த்து, வாடகைக்குக் கிடைக்கும் வங்கிக் கணக்குகள், சிம் அட்டைகள் மற்றும் வாட்ஸ்ஆப் கணக்குகளைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சி விற்பனையாளா்களைக் கண்டறிந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதில், அதுல் மீனா உண்மையான வாடிக்கையாளா் போல நடித்து, கிரிப்டோகரன்சி விற்பனையாளா்களுக்கு பிஷிங் இணைப்புகளை அனுப்பி அவா்களது டிஜிட்டல் வாலட்டுகளைக் கைப்பற்றி நாணயங்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ரூ.1.62 லட்சம் ரொக்கம், 11 செல்லிடப்பேசிகள், ஓா் ஐபேட், வைஃபை ரௌட்டா் மற்றும் 6 சிம் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மோசடி செய்யப்பட்ட முழுத் தொகையும் புகாா்தாரரிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. யுஎஸ்டிடி (டெதா்) என்பது அமெரிக்க டாலரின் மதிப்புக்கு இணையாக நிலையான மதிப்பைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஸ்டேபிள்காயின் வகை டிஜிட்டல் நாணயமாகும்.