வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய வேண்டுமா? அரிய வாய்ப்பு!

Wait 5 sec.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் இன்று (நவ. 22) நடைபெறுகிறது.இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 01.01.2027 மைய நாளாக கொண்ட சிறப்பு சுருக்க முறை திருத்தம்- 2027 மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (நவ.22) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடைபெறுகிறது.மேலும், இந்த சிறப்பு முகாம் நாள்களில், 12.11.2026 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பதிவுகளில் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர் படிவம் 6 மூலம் புதிய வாக்காளர்கள் சோ்க்கப்படவுள்ளனர். படிவம் 7 மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கவும், ஆட்சேபனை இருப்பின் அதைத் தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கப்பட உள்ளது. மேலும், படிவம் 8-ஐ பயன்படுத்தி வாக்காளர் விவரத் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை மாற்றுப் பிரதி பெறுதல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது நிறைவடைவோர், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகவும் (https://voters.eci.gov.in/) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.A special camp for adding names to or making corrections in the electoral roll is being held in Tamil Nadu today (Nov. 22).வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்