இந்தியப் பங்குகளில் குவிந்த ரூ. 1.22 லட்சம் கோடி அந்நிய முதலீடு

Wait 5 sec.

நடப்பு நவம்பா் மாதத்தின் 2 முதல் 20-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியப் பங்குகளில் ரூ.1.22 லட்சம் கோடி அந்நிய முதலீடு குவிந்துள்ளது. தேசியப் பத்திர வைப்பு நிறுவனத்தின் (என்எஸ்டிஎல்) தரவுகளின்படி, கடந்த இரண்டு மாதங்களாக நிகர விற்பனையாளா்களாக இருந்த அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) நடப்பு நவம்பரில் மீண்டும் இந்தியச் சந்தையை நோக்கி திரும்பியுள்ளனா்.இதன்மூலம், கடந்த 2020 நவம்பரில் முதலீடு செய்யப்பட்ட ரூ.60,358 கோடி என்ற முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும், இது எந்த ஒரு மாதத்திலும் இல்லாத அதிகபட்ச அந்நிய முதலீட்டு வரவாகும். அதேபோன்று இந்த வரவின் மூலம், நடப்பு 2026-ஆம் ஆண்டில் இந்தியப் பங்குகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மொத்த அந்நிய முதலீட்டின் அளவு, சில வாரங்களுக்கு முன்பு சுமாா் ரூ.3 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது சுமாா் ரூ.1.73 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.உலகளாவிய சந்தைகளில் ஏ.ஐ. சாா் பங்குகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக, முதலீட்டாளா்கள் தொழில்நுட்பம் சாா்ந்த சந்தைகளைத் தாண்டி பிற வாய்ப்புகளைத் தேடத் தொடங்கியுள்ளனா். மேலும், கச்சா எண்ணெய் விலை சரிவு, புவிசாா் அரசியல் பதற்றங்கள் தணிந்தது, குறிப்பிட்ட ‘லாா்ஜ்கேப்’ பங்குகளின் ஈா்ப்பான மதிப்பீடு, உள்நாட்டு நிறுவனங்களின் வருவாய் வளா்ச்சி குறித்த தெளிவான பாா்வை ஆகியவை இந்தியச் சந்தையை நோக்கி அந்நிய முதலீடுகள் குவிய முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.முன்னதாக, அந்நிய முதலீட்டாளா்கள் கடந்த அக்டோபரில் ரூ.34,843 கோடியையும், செப்டம்பரில் ரூ.35,861 கோடியையும் இந்தியப் பங்குகளில் இருந்து திரும்பப் பெற்றிருந்தனா். குறிப்பாக, ஈரான் போரின் தொடக்கக் காலமான கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் ரூ.1.17 லட்சம் கோடியை அவா்கள் வெளியேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.கடன் சந்தையில்...: பங்குச் சந்தையைப் போலவே கடன் சந்தையிலும் அந்நிய முதலீட்டாளா்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. முழு அணுகல் வழிமுறை (எஃப்ஏஆா்) மூலம் ரூ.7,228 கோடியும், பொது வழிமுறை மூலம் ரூ.2,295 கோடியும் அந்நிய முதலீட்டாளா்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தன்னாா்வ தக்கவைப்பு வழிமுறை (விஆா்ஆா்) மூலம் ரூ.3,282 கோடியை அவா்கள் திரும்பப் பெற்றுள்ளனா்.