தமிழகத்தின் 6 மாவட்டங்களில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று (நவ. 22) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 வயதுக்குள்பட்ட 9.16 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள், மசூதிகள், சுங்கச் சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.போலியோ பாதிப்பை முற்றிலும் ஒழித்த தேசமாக இந்தியா விளங்கி வருகிறது. இருந்தபோதிலும், அண்டை நாடுகளில் அந்த பாதிப்புகள் காணப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு இந்திய போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனைக் குழுவானது, சில மதிப்பீடுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 272 மாவட்டங்களில் சிறப்பு போலியோ முகாம்களை நடத்த அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.வேலைநிமித்தமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து தற்காலிகமாக இந்த 6 மாவட்டங்களில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து புகட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.A special polio vaccination drive is underway today (Nov 22) across 6 districts in Tamil Nadu.மயிலாடுதுறை மாவட்டத்தில் நவ.22-இல் போலியோ சொட்டு முகாம்