புதுச்சேரி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், காரைக்கால் பள்ளி மாணவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு, சிறந்த படைப்புகள் புதுச்சேரியில் கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கண்காட்சியில் வைக்கப்பட்டது.இதில், காரைக்கால் மாவட்டம், சுப்ராயபுரம் பகுதி அரசு தொடக்கப் பள்ளி மாணவா் ஹரிகிருஷ்ணன் தயாரித்திருந்த குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்தல், குப்பைகளை எரிக்கும்போது ஏற்படும் காற்று மாசை தடுக்கும் விதமாக ஃபில்டா் செய்யும் முறை காட்சிப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டது.நடுவா் குழுவினரால் தொடக்கப் பள்ளி அளவில், இவா் தயாரித்த படைப்பு முதல் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டது.புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் மாணவருக்கு பரிசு வழங்கினாா். நிகழ்வில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் ம. செல்வராஜ் கலந்துகொண்டாா்.காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை திரும்பிய மாணவா் மற்றும் வழிகாட்டு ஆசிரியருக்கு கல்வித் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.